search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை திருட்டு
    X
    நகை திருட்டு

    திண்டிவனம் அருகே பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணிடம் நகை அபேஸ்

    திண்டிவனம் அருகே பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணிடம் நகை அபேஸ் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கொனக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி செல்வி (வயது 48). இவர் நேற்று மதியம் வீட்டில் இருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் செல்வியின் வீட்டுக்கு வந்தார். செல்வி வீட்டில் உள்ள பிரச்சினைகள் பலவற்றை அந்த வாலிபர் கூறினார். பிரச்சினைகள் நீங்கவேண்டும் என்றால் பரிகாரம் செய்யவேண்டும் என அந்த வாலிபர் தெரிவித்தார். .

    தனது வீட்டில் உள்ள பிரச்சினைகளை கூறியதால் அந்த வாலிபரை நம்பிய செல்வி என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று கேட்டார்.

    அதற்கு அந்த வாலிபர் உங்கள் வீட்டில் இருக்கும் தங்க நகைகளை எடுத்து வாருங்கள் அதை வைத்துதான் பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறினார். இதை நம்பிய செல்வி வீட்டின் பீரோவில் இருந்த 4 பவுன் தங்க நகைகளை எடுத்துவந்து அந்த வாலிபரிடம் கொடுத்தார்.

    நகைகளை வாங்கிய உடன் அந்த நபர் கோவிலுக்கு சென்று நகைகளை வைத்து பரிகாரம் செய்து மீண்டும் உங்கள் வீட்டுக்கு நான் எடுத்துவருகிறேன். அதற்குள் வீட்டை சுத்தம் செய்து குளித்துவிட்டு இருக்கும்படி செல்வியிடம் கூறி சென்றார்.

    நகையை வாங்கி சென்ற அந்த வாலிபர் பலமணி நேரம் ஆகியும் திரும்பிவரவில்லை. அதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த செல்வி கதறி அழுதார். இதுகுறித்து ரோசனை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து பரிகாரம் செய்வதாக கூறி நூதனமுறையில் நகைகளை திருடிசென்ற மர்ம வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×