search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முன்னாள் எம்.எல்.ஏ. விடியல் சேகர் முன்னிலையில் த.மா.காவில் இணைந்தவர்களை படத்தில் காணலாம்.
    X
    முன்னாள் எம்.எல்.ஏ. விடியல் சேகர் முன்னிலையில் த.மா.காவில் இணைந்தவர்களை படத்தில் காணலாம்.

    அ.தி.மு.க. கூட்டணியில் 25 தொகுதிகளை கேட்டு பெறுவோம்- விடியல்சேகர் பேட்டி

    வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 25 தொகுதிகளை கேட்டு பெறுவோம் என்று திருப்பூரில் த.மா.கா. முன்னாள் எம்.எல்.ஏ. விடியல்சேகர் கூறினார்.
    அனுப்பர்பாளையம்:

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கொங்கு மண்டல மாணவரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காந்திநகரில் உள்ள திருப்பூர் மாநகர் மாவட்ட த.மா.கா. தலைமை அலுவலகமான மூப்பனார் பவனில் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் ரவிக்குமார் தலைமை தாங்கினார்.

    த.மா.கா. மாநில பொதுச்செயலாளரும், மாணவரணி பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான விடியல் சேகர் முன்னிலை வகித்தார். இதில் மாணவரணி மாநில தலைவர் சங்கர் முன்னிலையில் ஏராளமான மாணவர்கள் த.மா.கா.வில் இணைந்தனர்.

    கூட்டத்தில் பெருந்துறை மருத்துவ கல்லூரியில் அதிக கட்டண வசூலை கண்டித்து போராடி வரும் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று கட்டணத்தை குறைத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். மருத்துவ கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது. மாணவர்களின் கல்விக் கடன்களை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். திருப்பூரில் உள்ள பழைய பஸ் நிலையத்திற்கு தியாகி குமரன் பெயரையும், புதிய பஸ் நிலையத்திற்கு காமராஜர் பெயரையும் வைக்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் மாணவரணி மாநில துணை தலைவர்கள் அஸ்வின் சந்தர், சபரி, ராம்குமார், பொதுச்செயலாளர் நவீன், மாவட்ட தலைவர்கள் தீபக், ஆதித்யா, த.மா.கா. மாவட்ட துணை தலைவர் சிவசுப்பிரமணியம், தொழிற்சங்க தலைவர் தனசேகர், மூத்த நிர்வாகிகள் ஜெயா முத்துசாமி, ஞானவேல், மகளிரணி சர்மிளா, மாவட்ட செயலாளர்கள் முருகேஷ், ரவீந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் கந்தசாமி, சேதுராமன், மண்டல தலைவர்கள் பூபதி, சரவணகுமார், டிவிஷன் தலைவர் ராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் முன்னாள்எம்.எல்.ஏ. விடியல் சேகர்நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    சட்டமன்ற தேர்தலைசந்திக்க த.மா.கா. தயாராக உள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் 25 தொகுதிகளை கேட்டுப்பெறுவோம். திருப்பூர் மாவட்டத்திலும் போட்டியிட தலைவர் ஜி.கே.வாசனிடம் வாய்ப்புக்களை கேட்டுள்ளோம். அ.தி.மு.க. அரசு அத்திக்கடவு-அவினாசி திட்டம், விவசாய பயிர் கடன் ரத்து உள்பட பல்வேறு சாதனைகளை நிறைவேற்றி உள்ளது. நாட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான அலை வீசுவதாக கூறி வருகின்றனர். ஆனால் அவருக்கு ஆதரவான அலைதான் வீசி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×