search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விளாத்திகுளத்தில் லோடு ஆட்டோவில் கடத்திய ரேஷன் அரிசியை போலீசார் பார்வையிட்டபோது எடுத்த படம்.
    X
    விளாத்திகுளத்தில் லோடு ஆட்டோவில் கடத்திய ரேஷன் அரிசியை போலீசார் பார்வையிட்டபோது எடுத்த படம்.

    விளாத்திகுளம், சாத்தான்குளம் பகுதியில் 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 4 பேர் கைது

    விளாத்திகுளம், சாத்தான்குளம் பகுதியில் இருந்து கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து, 4 பேரை கைது செய்தனர்.
    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுப்பதற்காக, துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் மேற்பார்வையில், விளாத்திகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில் விளாத்திகுளம் போலீசார் நேற்று மதியம் விளாத்திகுளம்-குளத்தூர் ரோடு பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவை வழிமறித்து போலீசார் சோதனை செய்தனர். இதில் அந்த லோடு ஆட்டோவில் தலா 50 கிலோ எடை கொண்ட 50 மூட்டைகளில் மொத்தம் 2½ டன் ரேஷன் அரிசியை தூத்துக்குடியில் உள்ள பன்றி பண்ணைக்கு கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து ரேஷன் அரிசி மூட்டைகளுடன் லோடு ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பாக அந்த லோடு ஆட்டோவில் இருந்த விளாத்திகுளம் அருகே பி.சண்முகாபுரத்தைச் சேர்ந்த சண்முகராஜ் (வயது26), புளியங்குளத்தைச் சேர்ந்த மணிமாறன் பூபதி (28) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கவும், பறிமுதல் செய்த ரேஷன் அரிசியை நுகர்பொருள் வாணிக கிடங்கில் வழங்கவும் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இதேபோன்று சாத்தான்குளம் அருகே செட்டிவிளையில் தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாம்சன் ஜெபதாஸ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை வழிமறித்து போலீசார் சோதனை செய்தபோது, அதில் 20 மூட்டைகளில் மொத்தம் 1½ டன் ரேஷன் அரிசியை கேரள மாநிலத்துக்கு கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது.

    இதையடுத்து ரேஷன் அரிசி மூட்டைகளுடன் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தட்டார்மடம் அருகே கரிசல் பகுதியைச் சேர்ந்த மகாராஜன் (49), கன்னியாகுமரி களியல் பிள்ளையன்தோட்டத்தைச் சேர்ந்த பால் ஜினோ (29) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்து, ரேஷன் அரிசியை நுகர்பொருள் வாணிப கிடங்கில் வழங்கினர்.
    Next Story
    ×