search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடியில் அகில இந்திய கட்டுனர் சங்கத்தினர் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்திய போது எடுத்த படம்.
    X
    தூத்துக்குடியில் அகில இந்திய கட்டுனர் சங்கத்தினர் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்திய போது எடுத்த படம்.

    கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து அகில இந்திய கட்டுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    தூத்துக்குடியில், கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து, அகில இந்திய கட்டுனர் சங்கத்தினர் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட அகில இந்திய கட்டுனர் சங்கம் சார்பில், சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் அசோக் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஆஸ்கார், செயலாளர் ராஜேஷ், துணை செயலாளர் ஜெயபால், பொருளாளர் வில்லிஸ் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில், கடந்த 3 மாத காலமாக கட்டிடத்துறையில் முக்கிய மூலப்பொருளான சிமெண்ட் மற்றும் கம்பி வகைகளில் செயற்கையான தட்டுப்பாடு உருவாக்கி, கம்பெனிகள் இணைந்து அபரிமிதமான விலை உயர்த்தப்பட்டு உள்ளது. எனவே, கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், பொதுமக்கள், கட்டிட துறையின் அனைத்து நிலை பணியாளர்கள் நலன் கருதி, ஒரு ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகக்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள், கட்டிட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×