search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய கட்டுனர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற காட்சி.
    X
    இந்திய கட்டுனர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற காட்சி.

    பெரம்பலூர் மாவட்டத்தில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து வேலை நிறுத்தம்- ஆர்ப்பாட்டம்

    பெரம்பலூர் மாவட்டத்தில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து அகில இந்திய கட்டுனர் சங்கத்தின் சார்பில் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    பெரம்பலூர்:

    அகில இந்திய அளவில் கடந்த சில மாதங்களுக்குள் சிமெண்டு, இரும்பு, குழாய், மின்சாதன பொருட்கள், ஜன்னல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை சுமார் 45 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் கட்டிட பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, கட்டுமான பொறியியல் துறை மந்த நிலைக்கு சென்றுவிட்டது. அரசு கட்டுமான ஒப்பந்தம் பெற்ற ஒப்பந்ததாரர்கள் அவற்றை ஒப்பந்தம் செய்த தொகையில் கட்டுமான பணிகளை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கட்டுமானத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும், வீடு கட்ட முடிவு செய்தவர்களும், இந்த பொருட்களின் விலை ஏற்றத்தால் பாதிக்கப்படுகின்றனர். 

    எனவே அனைத்து கட்டுமான பொருட்களின் விலையை கட்டுக்குள் வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தும் விதமாக அகில இந்திய கட்டுனர் சங்கத்தின் சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் கட்டுனர் சங்க அமைப்பினர் நேற்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

    வேலை நிறுத்த போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் பெரம்பலூர் மைய தலைவர் சார்க் ராஜாராம் தலைமை தாங்கினார். செயலாளர் கோபிநாத், பொருளாளர் பாலமுருகன், மாவட்ட துணைத்தலைவர் சிவக்குமார், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் வள்ளலார்அரவிந்த், கலைதர்மராஜ், செந்தில்குமார், கலைநாதன் மற்றும் கட்டிட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து சங்க நிர்வாகிகள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.
    Next Story
    ×