search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறை தண்டனை
    X
    சிறை தண்டனை

    சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 7 ஆண்டு ஜெயில்

    சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நெல்லை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
    நெல்லை:

    நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்தவர் விஜயராகவன் (வயது 55). இவர் சம்பவத்தன்று அந்த பகுதியில் தாயுடன் கடைக்கு சென்ற 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து நெல்லை அனைத்து மகளிர் போலீசில் அந்த சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி, விஜயராகவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    இதுதொடர்பான வழக்கு நெல்லை மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இந்திராணி, குற்றம் சாட்டப்பட்ட விஜயராகவனுக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

    இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் ஜெபஜீவா ராஜா ஆஜரானார்.
    Next Story
    ×