search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்ததற்காக கைது செய்யப்பட்டவர்கள்- பறிமுதல் செய்யப்பட்ட பணம்
    X
    ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்ததற்காக கைது செய்யப்பட்டவர்கள்- பறிமுதல் செய்யப்பட்ட பணம்

    ஆன்லைன் லாட்டரி விற்ற 12 பேர் கைது- ரூ.3 லட்சம் பறிமுதல்

    தஞ்சை நகரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் ஆன்லைன் லாட்டரி விற்ற 12 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகர பகுதிகளில் பல்வேறு இடங்களில் ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மத்திய மண்டல போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில் தஞ்சை சரக திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சக்திகுமார் மற்றும் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

    தஞ்சை மாநகரில் 4 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்து வந்த அய்யம்பேட்டையை சேர்ந்த ஹமீது (வயது 36), தஞ்சை டவுன் கரம்பையை சேர்ந்த சதீ‌‌ஷ் (40), கும்பகோணத்தை சேர்ந்த கோவிந்தராஜ் (62), தஞ்சை பள்ளி அக்ரகாரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (51), மணிமண்டபம் பகுதியை சேர்ந்த கோவிந்தன் (42), மேல அலங்கத்தை சேர்ந்த கார்த்தி (35), கீழவாசலை சேர்ந்த நடராஜன் (54), விஜயமண்டப தெருவை சேர்ந்த மதன் (37) ஆகியோரை கைது செய்தனர்.

    மேலும் கும்பகோணம் ஜான்செல்வராஜ் நகரை சேர்ந்த பாண்டியன் (54), தஞ்சை கீழவாசல் விசிறிக்காரத்தெருவை சேர்ந்த பாலகிரு‌‌ஷ்ணன் (27), வயலூர் ராமபுரம் தெற்கு தெருவை சேர்ந்த வினோத் (28), கீழவாசல் செட்டியார் காலனியை சேர்ந்த சிவராஜ் (44) என மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைது செய்யப்பட்ட 12 பேரையும் போலீசார் தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பாரதிராஜனிடம் ஒப்படைத்தனர். அவருடைய உத்தரவின் பேரில் தஞ்சை நகர தெற்கு, கிழக்கு, மேற்கு போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×