
இது குறித்து கேட்டால் கொரோனா காரணமாக அரசு அறிவுறுத்தலின்படி தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். தற்போது அரசு பல்வேறு தளர்வுகளை வெளியிட்டுள்ளதாலும், கொரோனா நோய் தொற்று குறைந்து விட்டதாலும் பல்வேறு கோவில்கள் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு கோவில்களில் பூஜை பொருட்கள், அர்ச்சனை பொருட்களை கொண்டு செல்ல பக்தர்களுக்கு எவ்வித கட்டுப்பாடும் விதிக்கவில்லை.
ஆனால் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் மட்டும் பூஜைக்கான பொருட்கள் உள்ளிட்ட எவ்வித பொருட்களையும் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் பக்தர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே அரசின் உத்தரவுக்காக காத்திருக்காமல் பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தரிசனத்திற்கு அனைத்து கோபுர வாசல்கள் வழியாகவும் பக்தர்களை அனுமதிக்க வழிவகை செய்ய வேண்டும். மேலும் பூ உள்ளிட்ட பூஜை பொருட்களை கோவிலுக்குள் கொண்டு செல்லவும், பூஜை நேரங்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கும் அனுமதி வழங்க வேண்டும்.
மேலும் அனைத்து சன்னதிகளிலும் அர்ச்சனை செய்யவும், தீபம் ஏற்றி வழிபாடு செய்யவும் கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே கோவில் நிர்வாகம் இதற்கான அனுமதியை உடனே வழங்கிட வேண்டும்.