search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்தது

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்து, ஒரு சவரன் ரூ.36,048-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலையில் ஏற்ற- தாழ்வு காணப்பட்டது. கடந்த வாரம் தங்கம் பவுன் ரூ.36 ஆயிரத்தை தாண்டியது. பின்னர் விலை குறைந்த படியே வந்த நிலையில் மீண்டும் நேற்று முன்தினம் ரூ.36 ஆயிரத்தை கடந்து இருந்தது.

    இதற்கிடையே நேற்று தங்கம் பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.36 ஆயிரத்து 176-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 522 ஆக இருந்தது.

    இந்த நிலையில் தங்கம் விலை இன்றும் குறைந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.128 குறைந்து ரூ.36 ஆயிரத்து 48-க்கு விற்கிறது. கிராமுக்கு ரூ.16 குறைந்து ரூ.4 ஆயிரத்து 506 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ. 1,500 குறைந்து ரூ.72 ஆயிரத்து 900 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.72.90-க்கு விற்கிறது.
    Next Story
    ×