search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கவர்னர், பிரதமர் பெயரில் மோசடி செய்த கர்நாடக கும்பலைச் சேர்ந்த 3 பேர் கைது

    பிரதமர் மற்றும் கவர்னர் பெயரை பயன்படுத்தி பணமோசடியில் ஈடுபட்ட கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 3 மோசடி நபர்களை சி.பி.சி.ஐ.டி.போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த சில மோசடி நபர்கள், எம்.பி. சீட் வாங்கித் தருவதாக கூறியும், மத்திய அரசு டெண்டர் வாங்கித் தருவதாகவும் ஆசைகாட்டி கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்கு தமிழக கவர்னர் மற்றும் பிரதமர் பெயர்களை தவறாக பயன்படுத்திவருவதாகவும், அந்தக் கும்பல் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் மனு கொடுக்கப்பட்டது.

    இந்த மோசடி கும்பலிடம் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், ரூ.1½ கோடி பணத்தை இழந்துள்ளார். எம்.பி. சீட் கேட்டு அவர் இந்த பணத்தை கொடுத்து ஏமாந்துள்ளார்.

    இதுபற்றி வழக்குப்பதிவு செய்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    இது தொடர்பாக மைசூருவைச் சேர்ந்த மாதவய்யா (வயது 55) உள்பட சிலரை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. தனிப்படை போலீசார் கர்நாடக மாநிலம் விரைந்தனர். மாதவய்யா, அவரது மகன் அங்கிட் மற்றும் ஓம் ஆகிய 3 மோசடி நபர்களை சி.பி.சி.ஐ.டி. தனிப்படை போலீசார் நேற்று மைசூருவில் கைது செய்தனர். அவர்களை சென்னை அழைத்து வருகிறார்கள்.

    மாதவய்யா ஏற்கனவே ஒரு மோசடி வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டவர் ஆவார். தற்போது ஜாமீனில் இருந்த அவர் மீண்டும் மோசடி லீலைகளை அரங்கேற்றி போலீசில் மாட்டி உள்ளார்.
    Next Story
    ×