search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மணல் திருட்டை தடுக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    திருக்காட்டுப்பள்ளி அருகே மணல் திருட்டை தடுக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருக்காட்டுப்பள்ளி:

    பூதலூர் தாலுகா அலுவலகத்தின் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் பூதலூர் ஒன்றிய தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பூதலூர் ஒன்றிய விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். 

    ஆர்ப்பாட்டத்தில் பூதலூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் லதா, அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற தஞ்சை மாவட்ட செயலாளர் முகில், விவசாய தொழிலாளர்கள் சங்க ஒன்றிய செயலாளர் துரைராஜ், விவசாய சங்க பூதலூர் ஒன்றியசெயலாளர் செந்தில்குமார், மாதர் சங்க மாவட்ட செயலாளர் கண்ணகி மற்றும் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். 

    பூதலூர் ஒன்றியத்தில் பழுதான தொகுப்பு வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும். பூதலூர் ஒன்றியத்தில் நடைபெறும் மணல் திருட்டை தடுக்க வேண்டும். மணல் திருட்டில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். 100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்தி தினக்கூலி ரூ.600 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    Next Story
    ×