search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்
    X
    கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்

    மின்னணு தராசுகளில் மறைத்து கடத்த முயற்சி- சென்னை விமான நிலையத்தில் ரூ.5.1 கோடி போதைப்பொருள் சிக்கியது

    சென்னையில் இருந்து கத்தாருக்கு கடத்த முயன்ற ரூ.5.1 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் இருந்து கத்தாரின் தோகா நகருக்கு சரக்கு விமானத்தில் போதைப்பொருட்கள் கடத்த திட்டமிட்டிருப்பதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சரக்கு விமானத்தில் அனுப்புவதற்கு முன்பதிவு செய்யப்பட்ட பார்சல்கள் உள்ள குடோனில் சுங்கத்துறை அதிகாரிகள் சமீபத்தில் சோதனையிட்டனர்.

    அதில், தோகாவுக்கு அனுப்ப தயாராக இருந்த 55 மின்னணு தராசுகள் கொண்ட 7 பார்சல்களை அதிகாரிகள் பிரித்து பார்த்தனர். அந்த தராசுகள் வழக்கத்தைவிட எடை அதிகமாக இருந்தன. சந்தேகமடைந்த அதிகாரிகள் அந்த தராசுகளை பிரித்து பார்த்தபோது அதில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து தராசுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 44 கிலோ ஹஷிஷ் மற்றும் 700 கிராம் மெதாம்பிடமைன் போதைப்பொருட்களை போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின்கீழ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட ஹஷிஷ் மதிப்பு ரூ.4.4 கோடி என்றும், மெதாம்பிடமைனின் மதிப்பு ரூ.70 லட்சம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடத்தல் முயற்சி தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×