search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருப்பட்டி
    X
    கருப்பட்டி

    குன்னத்தூரில் ரூ.4 லட்சத்திற்கு கருப்பட்டி ஏலம்

    திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் ரூ.4 லட்சத்திற்கு கருப்பட்டி ஏலம் போனது.
    குன்னத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட கருப்பட்டி விற்பனை சம்மேளனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் திங்கட்கிழமை தென்னை மற்றும் பனை கருப்பட்டி ஏலம் நடைபெறுவது வழக்கம். நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு உற்பத்தியாளர்கள் 2 ஆயிரம் கிலோ தென்னங்கருப்பட்டி, ஆயிரம் கிலோ பனங்கருப்பட்டியை கொண்டு வந்தனர்.

    இதில் தென்னங்கருப்பட்டி ஒரு கிலோ 120 ரூபாய் 50 பைசா வீதம் 2 லட்சத்து 41 ஆயிரத்துக்கும், பனங்கருப்பட்டி 170 ரூபாய் பத்து பைசா வீதம் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 100 என மொத்தம் ரூ. 4 லட்சத்து 11 ஆயிரத்து 100-க்கு ஏலம் போனது.

    இந்த தகவலை கருப்பட்டி விற்பனை சம்மேளன மேலாண்மை இயக்குனர் மருதமுத்து, தலைவர் பொன்னுசாமி ஆகியோர் தெரிவித்தனர்.
    Next Story
    ×