search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கனிமொழி எம்பி
    X
    கனிமொழி எம்பி

    தினகரனும் சசிகலாவும் திமுகவின் பி-டீமா? கனிமொழி எம்பி பதில்

    பாஜகவின் பி டீமாக அதிமுக செயல்பட்டு வருகிறது. திமுகவுக்கு எந்த பி டீமும் தேவையில்லை என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
    மதுரை:

    சசிகலா இன்று தமிழகம் வந்துகொண்டிருக்கும் நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘’அதிமுக – அமமுக இணையாது. சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைப்பது என்பது நூறு சதவிகிதம் கிடையாது’’ என்றார்.
    அமைச்சர் ஜெயக்குமார்
    ’’அதிமுகவில் ஸ்லீப்பர் செல் கிடையாது. ஆனால், சில எட்டப்பன்கள் இருக்கிறார்கள். திமுகவின் பி டீம் தாம் சசிகலாவும் தினகரனும். திமுகவுக்கும் அமமுகவுக்கும் உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது என்றார்.

    இந்த நிலையில் மதுரையில் கனிமொழி எம்பி செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஜெயலலிதாவிற்கு பின்னர் சசிகலாவை அம்மா என்றார்கள். இப்போது அவரை வேறு மாதிரி பேசுகிறார்கள். அமைச்சர் சொன்னதை அவர் மறுத்தார். தினகரனும், சசிகலாவும் திமுகவின் பி டீம் இல்லை என்று தெரிவித்தார்.

    மாறாக, பாஜகவின் பி டீமாக அதிமுக செயல்பட்டு வருகிறது. திமுகவுக்கு எந்த பி டீமும் தேவையில்லை என்றார்.
    Next Story
    ×