என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முண்டியம்பாக்கத்தில் டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டம்
Byமாலை மலர்5 Feb 2021 2:56 PM GMT (Updated: 5 Feb 2021 2:56 PM GMT)
விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லுாரி முன்பு டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விக்கிரவாண்டி:
விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லுாரி முன்பு டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நடந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு சங்க தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் டாக்டர் குருநாத் முன்னிலை வகித்தார். டாக்டர் திருமாவளவன் வரவேற்றார். தேசிய இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் ஜெயலால், முன்னாள் தலைவர் டாக்டர் விஜயகுமார், மாநில தலைவர் டாக்டர் ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் டாக்டர் ரவிக்குமார், மாநில தலைவர்கள் டாக்டர்கள் பழனிசாமி, ராஜா, அபுல்ஹாசன், தியாகராஜன், பிரகாசம், ஸ்ரீதர், வினித் ஆகியோர் பேசினர்.
போராட்டத்தில் நிடிஆயோக் அமைப்பு மூலம் 4 குழுக்களை அமைத்து மருத்துவ கல்வி, பொது சுகாதாரம், மருத்துவ ஆராய்ச்சி, மருத்துவ பயிற்சி ஆகியவற்றை ஒரே கலவைக்குள் கொண்டு வர மத்திய அரசு முயற்சித்துள்ளது. இது நாட்டின் சுகாதாரத் துறையை பாதிக்கும். எனவே இந்த நிடி ஆயோக் அமைப்பை கலைக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். இதில் டாக்டர்கள் சிவக்குமார், மோகன், பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×