search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாதாள சாக்கடை திட்டம்
    X
    பாதாள சாக்கடை திட்டம்

    திருப்பத்தூரில் ரூ.104 கோடியில் பாதாள சாக்கடை திட்டம்

    திருப்பத்தூரில் ரூ.104 கோடியில் பாதாள சாக்கடை திட்டத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிகாட்சி மூலம் தொடங்கிவைத்தார்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் நகராட்சியில் 36 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.104 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடைத்திட்ட பணிகள் நடைபெற்றது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் பணிகள் முடிக்கப்பட்டு சோதனை ஓட்டத்தில் இருந்தது. வீடுகளுக்கு இணைப்பு வழங்கும் பணிகள் நகராட்சி சார்பில் நடைபெற்றது.

    இந்த நிலையில் பாதாள சாக்கடை திட்டத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்தபடி காணொலிகாட்சி மூலம் பாதாளசாக்கடை திட்டத்தை தொடங்கிவைத்தார்.

    அதைத் தொடர்ந்து திருப்பத்தூரில் நடந்த விழாவில் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் குத்து விளக்கேற்றி வைத்து பேசினார். அப்போது இத்திட்டத்தில் நகராட்சி மூலம் கழிவு நீர் இணைப்புகள் வழங்கப்பட்ட குடியிருப்புகளில் இருந்து வரும் கழிவுநீர் தற்போது முதல் கட்ட சோதனையில் சுத்திகரிக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது என்றார்.

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் ராம்சேகர், முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ், மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் டி.டி.குமார், குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர் செல்வராஜி, உதவி பொறியாளர் மீனா, நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×