என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கள்ளச்சாராயம் குடித்த தொழிலாளி ‘திடீர்’ மயக்கம்- சாராயம் விற்றவர் கைது
Byமாலை மலர்5 Feb 2021 8:07 AM GMT (Updated: 5 Feb 2021 8:07 AM GMT)
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே கள்ளச்சாராயம் குடித்த தொழிலாளி திடீரென மயக்கமடைந்தது தொடர்பாக சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள ஆரத்தி அகரம் ஊராட்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 60).
கூலி தொழிலாளியான இவர் நேற்று கருமந்துறை அடியானூர் மலைக்கிராமத்தை சேர்ந்த வெள்ளையன் சவுக்கு தோட்டத்தில் சாராயம் குடித்தார். பின்னர் சற்று நேரத்தில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கருமந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்த ஆத்தூர் மதுவிலக்கு போலீசார் அடியானூரில் ஆய்வு செய்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் தாழ்தொரடிபட்டு ஊராட்சி வாரம் கிராமத்தை சேர்ந்த குமார் (28) என்பவரிடம் சாராயம் வாங்கி குடித்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் லாரி டியூப்பில் அடைக்கப்பட்டிருந்த 50 லிட்டர் சாராயம் மற்றும் 60 பாக்கெட் சாராயம், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

Next Story
×