என் மலர்

  செய்திகள்

  அண்ணா நினைவிடத்தில் முக ஸ்டாலின் மரியாதை
  X
  அண்ணா நினைவிடத்தில் முக ஸ்டாலின் மரியாதை

  திமுகவினர் அமைதிப்பேரணி- அண்ணா நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அறிஞர் அண்ணாவின் 52-வது நினைவு நாளான இன்று அவரது நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
  சென்னை:

  பேரறிஞர் அண்ணாவின் 52-வது நினைவு தினத்தையொட்டி இன்று பல்வேறு நகரங்களில் அமைதி பேரணி நடத்தப்பட்டது.

  தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சி நிர்வாகிகள் சேப்பாக்கம் வாலாஜா சாலையில் இருந்து அமைதி பேரணியாக நடந்து சென்றனர்.

  இதில் மு.க.ஸ்டாலினுடன் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைப்பொதுச்செயலாளர்கள் ஆ.ராசா, பொன்முடி, டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., மாவட்டக் கழக செயலாளர்கள் சிற்றரசு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, தா.மோ.அன்பரசன், இளைய அருணா, மாதவரம் சுதர்சனம், வேலு, எம்.எல்.ஏ.க்கள் பல்லாவரம் இ.கருணாநிதி, ப.ரங்கநாதன், ரவிச்சந்திரன், தாயகம் கவி, தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, கவிஞர் காசிமுத்து மாணிக்கம்.

  பகுதி செயலாளர்கள் மதன்மோகன், ஜெ.கருணாநிதி, ஏழுமலை, அகஸ்டின் பாபு, அன்புதுரை, காமராஜ்.

  மாவட்ட பொருளாளர் ஐ.கென்னடி, பாலவாக்கம் விசுவநாதன், சைதை குணசேகரன், பூச்சி முருகன், துறைமுகம் காஜா, பெருங்குடி ரவிச்சந்திரன், ஏ.எம். வி.பிரபாகர்ராஜா, பகுதி துணை செயலாளர் சேப்பாக்கம் சிதம்பரம், உதயசூரியன், பாண்டிபஜார் பாபா சுரேஷ், பல்லாவரம் ஜோசப் அண்ணாதுரை, சிலம்பரசன், ஜானகிராமன், ரமேஷ், சிவக்குமார், வக்கீல் ராஜாராம் உள்பட ஆயிரக்கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணியினர் அமைதிப் பேரணியில் நடந்து சென்றனர்.

  மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தை பேரணி சென்றடைந்ததும் அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும் மலர் தூவியும் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அங்குள்ள கருணாநிதி நினைவிடத்திலும் மு.க.ஸ்டாலின் மலர் தூவி வணங்கினார்.
  Next Story
  ×