search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஜாமின் வழங்க கோர்ட்டில் போலி ஆவணங்கள் தாக்கல்- பெண் புரோக்கர் உள்பட 2 பேர் கைது

    மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு ஜாமின் வழங்க கோர்ட்டில் போலி ஆவணங்களை தாக்கல் செய்த பெண் புரோக்கர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    கோவை:

    கோவையை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். அவர் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கோவை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த கோர்ட்டில் ஜாமின் கேட்டு செந்தில்குமார் மனு தாக்கல் செய்தார். அதன்படி கோர்ட்டு அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

    செந்தில்குமாருக்கு ஜாமின்தாரர்களாக அன்னூர் அருகே உள்ள புகலூர் வலசை சேர்ந்த பழனிசாமி (வயது 55), அனுப்பர்பாளையத்தை சேர்ந்த தேவி (52) என்பவர் ஆஜரானார்கள். அவர்களது ஆவணங்களை நீதிபதி சரிபார்த்த போது அதில் முகவரிகள் முன்னுக்குப்பின்னாக இருப்பதும், போலியானது என்பதும் தெரியவந்தது. இதனை கண்டுபிடித்த சிறப்பு நீதிபதி ரவி அவர்களை கைது செய்ய உத்தரவிட்டார்.

    அதன்படி கோர்ட்டு உதவியாளர் தங்கமணி கோர்ட்டில் போலி ஆவணங்களை தாக்கல் செய்த பழனிசாமி, தேவி ஆகியோர் மீது ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் பழனிசாமி, தேவி மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் மோசடி, ஏமாற்ற பொய் ஆவணம் தயாரித்தல், பொய் தகவல் நிறுவுதல், அரசு ஊழியரிடம் பொய் தகவல் கொடுத்தல், பொய் சாட்சியம் அளித்தல், பொய்யான சான்றிதழை உண்மை என பயன்படுத்துதல் உள்ளிட்ட 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×