search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலியோ சொட்டு மருந்து முகாமை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தபோது எடுத்த படம்
    X
    போலியோ சொட்டு மருந்து முகாமை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தபோது எடுத்த படம்

    திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு போலியோ சொட்டு மருந்து

    திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
    திருப்பூர்:

    திருப்பூர் ஊராட்சி ஒன்றியம் இடுவாய் அம்மா மினி கிளினிக் வளாகத்தில் நேற்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் போலியோ சொட்டு மருந்து முகாமினை மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமையில், பல்லடம் தொகுதியை சேர்ந்த கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ. முன்னிலையில், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    போலியோ சொட்டு மருந்து பணிக்காக பல்வேறு துறைகளைச்சார்ந்த 4, 780 பணியாளர்கள் மற்றும் ரோட்டரி சங்கத்தினர் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 2 லட்சத்து 80 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட இருந்தது. மேலும், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இதுவரை எத்தனை முறை சொட்டு மருந்து அளித்திருந்தாலும் இம்முறை கூடுதல் தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கிட வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை போலியோ நோயிலிருந்து பாதுகாப்பதுடன் போலியோ நோய் இல்லாத இந்தியாவை உருவாக்கிட வேண்டும் . இவ்வாறு அவர் கூறினார். இதில் துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) ஜெகதீஷ்குமார், அரசு அலுவலர்கள் மற்றும் பொது மருத்துவ சுகாதாரத்துறையினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×