என் மலர்
செய்திகள்

டிடிவி தினகரன்
சசிகலா சென்னை வருவது எப்போது?- தினகரன் தகவல்
சசிகலா சென்னை வருவது எப்போது? என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை:
பெங்களூரு சிறையில் கடந்த 4 ஆண்டுகளாக இருந்த சசிகலா, கடந்த 27-ந் தேதி விடுதலை ஆனார். அந்தநேரம் கொரோனா பாதிப்பு காரணமாக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். ஆஸ்பத்திரியில் இருந்த சசிகலாவிடம், சிறைத்துறை நிர்வாகத்தின் சார்பில் அதிகாரிகள் நேரடியாக சென்று, விடுதலை செய்யப்பட்டதற்கான சான்றிதழை வழங்கினர்.
இந்தநிலையில் சசிகலா, கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்தார். எனவே இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சார்ஜ்' ஆகிறார்.
ஆனாலும் ஒருவாரம் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற டாக்டர்களின் அறிவுரையின்படி, பெங்களூருவிலேயே ஒரு வீட்டில் ஒரு வாரம் தங்கி சசிகலா ஓய்வெடுக்க இருக்கிறார். அதன்பிறகு சென்னைக்கு அவர் புறப்பட்டு வருகிறார்.
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. இத்தகவலை தெரிவித்தார்.
Next Story