என் மலர்

  செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  மினி வேன் கவிழ்ந்து 25 பெண்கள் படுகாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜெயலலிதா கோவில் திறப்பு விழாவுக்கு சென்ற மினி வேன் கவிழ்ந்து 25 பெண்கள் படுகாயம் அடைந்தனர்
  மதுரை:

  மதுரை மாவட்டம் டி.குன்னத்தூரில் ஜெயலலிதா கோவில் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான அ.தி.மு.க.வினர் வாகனங்களில் வந்தனர். பெரிய பூலாம்பட்டி என்ற பகுதியிலிருந்து கோவில் திறப்பு விழாவுக்கு மினி வேன் ஒன்றில் 25 பெண்கள் சென்று கொண்டிருந்தனர்.

  இந்த வேன் தேவன்குறிச்சி என்ற இடத்தில் சென்று கொண்டிந்தபோது, முன்னால் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. இதைதொடர்ந்து வேனும் திடீரென நிலைதடுமாறி சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த பெண்கள் 25 பேரும் படுகாயமடைந்தனர். மேலும் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த கே.சத்திரப்பட்டியை சேர்ந்த ராமன் (வயது 50) என்பவரும் காயமடைந்தார்.
  Next Story
  ×