என் மலர்

  செய்திகள்

  கொள்ளை
  X
  கொள்ளை

  உப்பிலியபுரம் அருகே 3 வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உப்பிலியபுரத்தையடுத்துள்ள சோபனபுரத்தில் நேற்று நள்ளிரவில் 3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  உப்பிலியபுரம்:

  சோபனபுரம் எம்.ஜி.ஆர்.நகரில் வசிப்பவர் ரமேஷ் (வயது 47). அறுவை சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவே, உதவிக்காக அவரது மகனும், மனைவியும் மருத்துவமனைக்கு சென்றுவிட்டனர். வீட்டில் தனியாக இருந்த ரமேசின் மகள் ரோஷினி (17) இரவில் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்று தங்கினார்.

  காலையில் அவர் வீட்டுக்கு வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததுடன், உள்பக்கமாக பூட்டி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இதுபற்றி உப்பிலியபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம ஆசாமிகள், கதவை உள்பக்கமாக தாழிட்டுவிட்டு, பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.97 ஆயிரம், 12 பவுன் நகை ஆகியவற்றை திருடிக்கொண்டு பின்பக்கமாக தப்பிச்சென்றது தெரியவந்தது.

  இதேபோல் அதே பகுதியில் மற்றொரு ரமேஷ் (33), தனது வீட்டை பூட்டி விட்டு, தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றிருந்தார். காலையில் வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரம், 3 பவுன் நகை ஆகியவற்றை திருடிச்சென்றது தெரியவந்தது. உடனே இதுகுறித்து உப்பிலியபுரம் போலீஸ் நிலையத்துக்கு அவர் தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

  இதற்கிடையே அதே பகுதியில் மற்றொரு வீட்டின் பூட்டை உடைக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விறைந்து களவாடப்பட்ட பொருள்களின் விவரம் வீட்டின் உரிமையாளர் வீட்டிற்கு திரும்பிய பிறகு தெரியவரும் என தெரிகிறது. 3 வீடுகளில் தொடர் திருட்டு நடந்துள்ளது. அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  Next Story
  ×