search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சார ரெயில்
    X
    மின்சார ரெயில்

    செங்கல்பட்டில் பராமரிப்பு பணி- 17 மின்சார ரெயில்களின் சேவை நாளை ரத்து

    செங்கல்பட்டு யார்டில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் இந்த தடத்தில் 17 மின்சார ரெயில்களின் சேவை நாளை ரத்து செய்யப்படுகின்றன.
    சென்னை:

    தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள பத்திரிகை குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ரெயில்களின் இயக்கத்தை கருத்தில் கொண்டு செங்கல்பட்டு யார்டில் பராமரிப்பு பணிகள் நாளை காலை 6.55 மணி முதல் மாலை 6 மணி வரையில் நடைபெற உள்ளது.

    இதனால் இந்த தடத்தில் மின்சார ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி அரக்கோணம்- செங்கல்பட்டுக்கு காலை 5.35, செங்கல்பட்டு- அரக்கோணம் காலை 8.20 மற்றும் சென்னை கடற்கரை - திருமால்பூர் மாலை 6, காஞ்சிபுரம் மாலை 6.40, செங்கல்பட்டுக்கு அதிகாலை 4.55, காஞ்சிபுரத்துக்கு அதிகாலை 5.45, செங்கல்பட்டுக்கு காலை 6.25, 7.05, 7.40, மாலை 3, 3.50 மணி ரெயில்களின் சேவை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

    செங்கல்பட்டு - சென்னை கடற்கரை காலை 7.25, 8.10, 8.50, 9.05, மாலை 5, 5.50 மணிக்கு செல்லவேண்டிய மின்சார ரெயில்களின் சேவையும் ரத்து செய்யப்படுகின்றன.

    இதற்கு மாற்றாக பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு சென்னை கடற்கரையில் இருந்து அதிகாலை 4.55, 5,45, காலை 6.25, 7.05, 7.40, மாலை 5, 5.50 மணிக்கு சிங்கபெருமாள் கோவிலுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

    இதேபோல சிங்கபெருமாள் கோவிலில் இருந்து காலை 6.40, 7.35, 8.20, 9, 9.35 மாலை 5.10, 6 மணிக்கு சென்னை கடற்கரைக்கு மின்சார ரெயில்கள் இயக்கப்படும்.

    சென்னை கடற்கரை - செங்கல்பட்டுக்கு காலை 6, 6.45, 10.35, 11.15, மதியம் 12, 1, 2 மணி ரெயில்களும், சென்னை கடற்கரை - திருமால்பூர் மதியம் 1.30 மணி ரெயிலின் சேவைகளின் ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டு, தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

    இதேபோல் காஞ்சிபுரம்-சென்னை கடற்கரை காலை 7.05, 9.45 மணி, திருமால்பூர் - சென்னை கடற்கரை காலை 7.50, மாலை 6.15, செங்கல்பட்டு - சென்னை கடற்கரை காலை 8.30, 10.15, 11 மதியம் 1.25, 2.15, மாலை 3.05, 4.05 மணி மின்சார ரெயில்கள் சேவையில் ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டு தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


    Next Story
    ×