என் மலர்

  செய்திகள்

  மதுரை அருகே டி.குன்னத்தூரில் இன்று திறக்கப்பட உள்ள ஜெயலலிதா கோவிலை படத்தில் காணலாம்.
  X
  மதுரை அருகே டி.குன்னத்தூரில் இன்று திறக்கப்பட உள்ள ஜெயலலிதா கோவிலை படத்தில் காணலாம்.

  ஜெயலலிதா கோவில் திறப்பு விழா: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மதுரை வருகை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜெயலலிதா கோவில் திறப்பு விழாவுக்காக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (சனிக்கிழமை) மதுரை வருகிறார்.
  மதுரை:

  தமிழக வருவாய்த்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டின் பேரில் ஜெயலலிதா பேரவை மற்றும் அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் மதுரை திருமங்கலம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட டி.குன்னத்தூரில் சுமார் 12 ஏக்கரில் கட்டப்பட்டுள்ளது.

  இந்த கோவிலில் ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆருக்கு சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.. ஒவ்வொரு சிலையும் சுமார் 400 கிலோ எடையில் முழு உருவ வெண்கல சிலையாக நிறுவப்பட்டு உள்ளன.

  இந்த கோவில் திறப்பு விழா இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. அதற்காக யாக சாலை பூஜைகள் தொடங்கி நடந்து வருகின்றன. இந்த கோவிலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று காலை 10.30 மணிக்கு திறந்து வைக்கின்றனர். அதன்பின் நடக்கும் கோ-பூஜையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். தொடர்ந்து அவர், கட்சியி்ன் மூத்த கட்சி நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்குகிறார்.

  அங்கு தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடக்கிறது. அதில் முதல்-அமைச்சர், தமிழக அரசின் சாதனை திட்டங்கள் குறித்து விளக்கி பேசுகிறார். அதன்பின் அங்கிருந்து புறப்பட்டு மதுரை விமானம் நிலையம் வந்து, சென்னை செல்கிறார்.

  முன்னதாக இன்று காலையில் மதுரை வரும் எடப்பாடி பழனிசாமிக்கு,. விமான நிலையத்தில் இருந்து ஜெயலலிதா கோவில் செல்லும் வழிநெடுகிலும் ஜெயலலிதா பேரவை மற்றும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
  Next Story
  ×