என் மலர்

  செய்திகள்

  ஜேபி நட்டா
  X
  ஜேபி நட்டா

  தேர்தல் பிரசாரத்துக்காக பா.ஜ.க தேசிய தலைவர் நட்டா இன்று மதுரை வருகை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முதல் கட்டமாக தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளார். இதற்காக அவர் இன்று இரவு தனி விமானம் மூலம் மதுரை வருகிறார்.
  மதுரை:

  தமிழக சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதையொட்டி கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

  அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டன.

  அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜ.க.வும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. அதன் மாநில தலைவர் எல்.முருகன் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முதல் கட்டமாக தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளார்.

  மதுரையில் இந்த பிரசாரத்தை தொடங்குவதற்காக இன்று இரவு அவர் தனி விமானம் மூலம் மதுரை வருகிறார்.

  பின்னர் அருகில் உள்ள தனியார் விருந்தினர் மாளிகையில் ஜே.பி. நட்டா தங்குகிறார்.

  நாளை (30ந்தேதி) காலை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். மதியம் தமிழக பா.ஜ.க.மையக் குழு உறுப்பினர்களின் கூட்டத்தில் பங்கேற்று கலந்துரையாடுகிறார்.

  அப்போது சட்டமன்ற தேர்தலில் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது குறித்து அவர் ஆலோசனை நடத்துகிறார். அதனைத் தொடர்ந்து பா.ஜ.க.வில் இணைந்த மற்ற கட்சி நிர்வாகிகளுடன் அவர் மதிய விருந்தில் பங்கேற்கிறார்.

  மாலையில் ஜே.பி.நட்டா முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசுகிறார். அதனைத் தொடர்ந்து மதுரை ரீங்ரோடு அம்மா திடலில் நடக்கும் பா.ஜ.க. தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

  நாளை இரவு மதுரையில் தங்கும் ஜே.பி.நட்டா அடுத்த நாள் (31ந்தேதி) புதுச்சேரி புறப்பட்டு செல்கிறார்.

  பா.ஜ.க. தேசிய தலைவர் வருகையையொட்டி அவர் தங்கும் விடுதி மற்றும் செல்லும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
  Next Story
  ×