search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது செய்யப்பட்ட நபர்கள்
    X
    கைது செய்யப்பட்ட நபர்கள்

    பல்லடத்தில் கடைகளில் திருடிய 4 வாலிபர்கள் கைது

    பல்லடத்தில் கடைகளின் பூட்டை உடைத்து திருடிய 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    பல்லடம்:

    பல்லடம் கல்லம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பூட்டை உடைத்து விலைஉயர்ந்த கேமராக்கள், லென்ஸ்கள், லேப்டாப், ஹார்ட் டிஸ்க், உள்ளிட்டவை திருடப்பட்டது.

    கடந்த 25-ந் தேதி பல்லடம் செட்டிபாளையம் ரோட்டில் அரசு பஸ் டிப்போ பஸ் நிறுத்தம் எதிரே செல்போன் மற்றும் ஜெராக்ஸ் கடை, துணிக்கடைகளின் பூட்டை உடைத்து, ரூ.5 ஆயிரம், சில செல்போன்களும், துணிக்கடையில், ஜீன்ஸ் பேண்ட்கள் உள்ளிட்டவையும், சற்று தூரத்தில் உள்ள மோட்டார் சைக்கிள் பழுதுபார்க்கும் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த, மோட்டார் சைக்கிளின் என்ஜின் மற்றும் இரும்பு பொருட்களும் திருடப்பட்டது.

    இந்த திருட்டு தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல் உத்தரவின் பேரில், பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீராமச்சந்திரன் மேற்பார்வையில், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுஜாதா, சப்-இன்ஸ்பெக்டர் அமல்தாஸ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது.

    இந்த நிலையில் நேற்று அண்ணாநகர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டரில் வந்த 4 வாலிபர்களை போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை செய்தனர்.

    இதில அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசினர். இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள் உசிலம்பட்டி தாலுகா வெள்ளியம்பட்டியைச் சேர்ந்த திருமுருகன் (வயது 21), சூலூர் தாலுகா வாரப்பட்டியை சேர்ந்த திருமூர்த்தி (22), பல்லடம் அண்ணாநகர் பிரதீப் (23) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த வினோத் (21) என்பதும் இவர்கள் 4 பேரும் சேர்ந்து கடைகளின் பூட்டுகளை உடைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

    அவர்களிடமிருந்து டிஜிட்டல் கேமராக்கள் 2, கேமரா லென்ஸ் 2, மடிக்கணினி 2, கம்ப்யூட்டர் ஹார்ட்டிஸ்க் 4, மோட்டார் சைக்கிள் 1, பிரிண்டர் 1, 1½ பவுன் சங்கிலி, செல்போன்கள் 4, மற்றும் பூட்டுக்களை உடைக்க பயன்படுத்திய இரும்பு கம்பி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பெருந்துறை சிறையில் அடைக்கப்பட்டனர்.
    Next Story
    ×