என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  தந்தையுடன் மொபட்டில் சென்றபோது விபத்து - டிப்பர் லாரி தலையில் ஏறி 4-ம் வகுப்பு மாணவி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கவுண்டம்பாளையம் அருகே தந்தையுடன் மொபட்டில் சென்றபோது டிப்பர் லாரி தலையில் ஏறி 4-ம் வகுப்பு மாணவி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  கவுண்டம்பாளையம்:

  கோவை இடையர்வீதி வெங்கிட்டாபுரம் பாபா வீதியை சேர்ந்தவர் அசோகன். பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் சகானா (வயது 9). அங்குள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.

  நேற்று அசோகன் தனது மகளுடன் மொபட்டில் புறப்பட்டார். அப்போது பின்னால் டிப்பர் லாரி ஒன்று வந்தது. எதிர்பாராதவிதமாக மொபட் மீது டிப்பர் லாரி மோதியது. மோதிய வேகத்தில் அசோகன் வேறு திசையில் தூக்கி வீசப்பட்டார். மாணவி சகானா டிப்பர் லாரி சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த சிறுமி ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

  அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவிக்கு முதலுதவி சிசிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி சகானா பரிதாபமாக இறந்தார். தந்தை அசோகன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த துடியலூர் போலீசார் டிப்பர் லாரியை ஓட்டி வந்த அசோக்குமார் (28) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×