என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  தூத்துக்குடி அருகே வருவாய்த்துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தூத்துக்குடி மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர். இதனால் கலெக்டர் அலுவலகம் வெறிச்சோடியது.
  தூத்துக்குடி:

  தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் அலுவலக உதவியாளர்கள் முதல் தாசில்தார் வரை அனைத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனிஊதியம் வழங்கப்பட வேண்டும். மாவட்டங்களில் அதிக அளவில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவு காவலர், பதிவுறு எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களை உடனடியாக நிரந்தர அடிப்படையில் நிரப்ப வேண்டும். ஜாக்டோ, ஜியோ பாதிப்புகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக நேற்று ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

  அதன்படி தூத்துக்குடி மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், உதவி கலெக்டர் அலுவலகங்களில் பணியாற்றி வந்த அரசு அலுவலர்கள், ஊழியர்கள் சுமார் 400 பேர் பங்கேற்றனர். இதனால் கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்கள், உதவி கலெக்டர் அலுவலகங்கள் வெறிச்சோடி கிடந்தன. இதனால் வருவாய்த்துறை மூலம் சான்றிதழ் வழங்கும் பணி உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடங்கின.
  Next Story
  ×