என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  அரசு நிர்ணயித்த தொகையை விட அதிக விலைக்கு மது விற்ற விற்பனையாளர், பார் உதவியாளர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  செட்டிப்பாளையம் அருகே அரசு நிர்ணயித்த தொகையை விட அதிக விலைக்கு மது விற்ற விற்பனையாளர், பார் உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.

  கோவை:

  கோவை செட்டிப் பாளையம் ஈச்சனாரி பிரிவு அருகே அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.

  இந்த டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்க்கும் லெனின், பார் உதவியாளர் சரவணன் ஆகியோர் அரசு நிர்ணயித்த தொகையை விட கூடுதல் தொகைக்கு மதுபாட்டில்களை விற்பனை செய்வதாக கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது. 

  இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. கணேசன், இன்ஸ்பெக்டர் சசிலேகா தலைமையில் போலீசார் டாஸ்மாக் கடையில் நேற்று இரவு சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.70 ஆயிரம் ரொக்க பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் டாஸ்மாக் கடை விற்பனையாளர் லெனின், பார் உதவியாளர் சரவணன் ஆகியோரை கைது செய்தனர்.

  பின்னர் அவர்களை நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  Next Story
  ×