search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை செய்யப்பட்ட காத்தூன் பீவி
    X
    கொலை செய்யப்பட்ட காத்தூன் பீவி

    சொத்து பிரச்சினையில் பெண் கொலை- சகோதர, சகோதரிகளிடம் விசாரணை

    மதுரை பெருங்குடி அருகே சொத்து பிரச்சினையில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது சகோதர, சகோதரிகளிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
    மதுரை:

    மதுரை பெருங்குடி சிவசக்தி நகரை சேர்ந்தவர் முகமது கவுஸ். இவரது மனைவி காத்தூன் பீவி (வயது 55). இவர் தனது பூர்வீக இடத்தில் வீடு கட்டி வசித்து வந்துள்ளார். இது தொடர்பாக அவரது சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை உறவினர்கள் சேர்ந்து அரிவாள்மனை மற்றும் கம்புகளை கொண்டு தாக்கியதில் காத்தூன்பீவி பலத்த காயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இரவில் அவர் உயிரிழந்தார்.

    இதுகுறித்து பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து காத்தூன்பீவியின் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளிடம் விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×