என் மலர்

  செய்திகள்

  கோப்பு படம்
  X
  கோப்பு படம்

  சேலம் நெத்திமேட்டில் தாய்-மகனுக்கு கத்திக் குத்து: கட்டிட தொழிலாளி ஆத்திரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலம் நெத்திமேட்டில் தாய்-மகனுக்கு கத்திக் குத்து விழுந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  சேலம்:

  சேலம் நெத்திமேடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன், மேஸ்திரி. இவருடன் அந்த பகுதியை சேர்ந்த வனிதா (வயது 45 என்பவர் கட்டிட வேலைக்கு சென்று வந்தார்.

  அப்போது சுப்பிரமணிக்கும், வனிதாவுக்கும் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து சுப்பிரமணி, வனிதாவுக்கு பணம் கொடுத்து வந்தார். இந்த சம்பவம் வனிதாவின் கணவருக்கு தெரிய வந்ததால் அவர் 2 பேரையும் கண்டித்தார்.

  இதையடுத்து வனிதா, சுப்பிரமணியுடன் பேசுவதை தவிர்த்து வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சுப்பிரமணி தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார். ஆனால் அவர் திருப்பி கொடுக்கவில்லை. இதனால் சுப்பிரமணியனுக்கும், வனிதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

  இதனை அறிந்த வனிதாவின் மகன் அருண் (20) சுப்பிரமணியனை தட்டிக்கேட்டார். இதில் அருணுக்கும் , சுப்பிரமணிக்கும் இடையே இன்று காலை தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதும் ஆத்திரம் அடைந்த சுப்பிரமணி , அருண் மற்றும் அவரது தாய் வனிதாவையும் கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் காயம் அடைந்த 2 பேரும் அலறி துடித்தனர்.

  இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×