search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை கொள்ளை
    X
    நகை கொள்ளை

    சாமிதோப்புக்கு வந்த பெண்ணிடம் 6½ பவுன் தங்க சங்கிலி அபேஸ்

    சாமிேதாப்புக்கு வந்த பெண்ணிடம் 6½ பவுன் தங்க சங்கிலி அபேஸ் செய்யப்பட்டுள்ளது. தேர்திருவிழாவின் போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர் கைவரிசை காட்டியுள்ளார்.
    தென்தாமரைகுளம்:

    நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே வேளியார்குளத்தைச் சேர்ந்தவர் கந்தன் (வயது 68), இவர் தன்னுடைய மனைவி ரஞ்சிதகனி, மகன் பிரபு ஆகியோருடன் சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி கோவிலுக்கு வந்தார்.

    இங்கு தை திருவிழா தேரோட்டத்தில் கலந்து கொண்ட அவர்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டனர். சாமி கும்பிட்டு விட்டு கோவிலை விட்டு வெளியே வந்தனர். அப்போது ரஞ்சிதகனி கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    ரஞ்சிதகனி கழுத்தில் கிடந்த தங்க சங்கிலி 6½ பவுன் என கூறப்படுகிறது. அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் தங்க சங்கிலி கிடைக்கவில்லை. யாரோ மர்மநபர்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி தங்க சங்கிலியை பறித்து சென்றதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து தென்தாமரைகுளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்கென்னடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    தேர்திருவிழாவில் 6½ பவுன் தங்க சங்கிலி அபேஸ் செய்யப்பட்ட சம்பவம் பக்தர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×