என் மலர்

  செய்திகள்

  விபத்து
  X
  விபத்து

  கொடைரோடு அருகே பஸ் மோதி மதுரை பக்தர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொடைரோடு அருகே நடந்து சென்று கொண்டிருந்த மதுரை பக்தர் மீது தனியார் பஸ் மோதியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
  கொடைரோடு:

  மதுரை புதூரை சேர்ந்தவர் கணேசன் (வயது 31). கூலித்தொழிலாளி. இவர் பழனி முருகன் கோவிலுக்கு மாலை அணிந்து பாதயாத்திரையாக பக்தர்கள் குழுவினருடன் நடந்து சென்றார். கொடைரோடு அருகே பொட்டிசெட்டிபட்டி பிரிவு என்ற இடத்தில் நேற்று முன்தினம் இரவு வந்தபோது அவர்கள் மீது தனியார் பஸ் மோதியது.

  இதில் படுகாயம் அடைந்த கணேசன் மற்றும் அவருடன் பாதயாத்திரையாக வந்த மதுரை புதூர் ஆனைகுளம் பகுதியை சேர்ந்த ஆதவன் (45) தங்கராஜ் (50), தினேஷ்குமார் 14) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

  இதையடுத்து அவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கணேசன் பரிதாபமாக இறந்தார்.

  இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
  Next Story
  ×