என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  திருவையாறு அருகே கஞ்சா விற்றவர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவையாறு அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  திருவையாறு:

  திருவையாறு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக திருவையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜம்புலிங்கம் ஆகியோருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது பொன்னாவரை சுடுகாடு அருகே நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அதேபகுதியை சேர்ந்த மணிமாறன் என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிமாறனை கைது செய்து, அவரிடம் இருந்த 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
  Next Story
  ×