search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அருந்ததியர் மக்கள் இயக்கம் சார்பில் சேலம் குகை மாரியம்மன் கோவிலை முற்றுகையிட்டு போராட்டம்

    சேலம் அருகே அருந்ததியர் மக்கள் இயக்கம் சார்பில் சேலம் குகை மாரியம்மன் கோவிலை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.
    சேலம்:

    சேலம் குகை பகுதியில் மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் கடைகளை பொது ஏலத்தில் விட வேண்டும், திருவிழாவின்போது சாமி திருவீதி உலா தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்கு செல்ல வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும் என அருந்ததியர் மக்கள் இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி அருந்ததியர் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் வக்கீல் பிரதாபன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று குகை மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். முடிவில், கோரிக்கைகள் அடங்கிய மனுவை அருந்ததியர் மக்கள் இயக்க நிர்வாகிகள் கோவில் செயல் அலுவலரிடம் வழங்கினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×