என் மலர்

  செய்திகள்

  தீப்பற்றி எரிந்த காரின் மீது தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்த காட்சி.
  X
  தீப்பற்றி எரிந்த காரின் மீது தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்த காட்சி.

  ஆலத்தூர் அருகே மரத்தில் கார் மோதி தீப்பற்றி எரிந்தது- முதியவர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆலத்தூர் அருகே மரத்தில் கார் மோதி தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் முதியவர் பரிதாபமாக இறந்தார்.
  பாடாலூர்:

  பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரத்தை அடுத்துள்ள அழகாபுரி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த்(வயது 35). இவருடைய மாமனார் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த ரெங்கராஜ்(60). ஆனந்த், கோவில்பட்டிக்கு சென்று ரெங்கராஜை காரில் அழைத்துக்கொண்டு அழகாபுரிக்கு வந்து கொண்டிருந்தார். காரை ஆனந்த் ஓட்டினார்.

  திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தில் வந்தபோது, சாலையின் ஓரத்தில் உள்ள புளியமரத்தின் மீது கார் மோதியது. இதில் ரெங்கராஜ் பலத்த காயமடைந்தார். அவரை, அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

  ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். காயமடைந்த ஆனந்த், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து பற்றி தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் அங்கு சென்று, ரெங்கராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  இதற்கிடையே விபத்துக்குள்ளான கார், சிறிது நேரத்தில் தீப்பற்றி எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்த பெரம்பலூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
  Next Story
  ×