என் மலர்

  செய்திகள்

  விபத்து பலி
  X
  விபத்து பலி

  பெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  பெரம்பலூர்:

  பெரம்பலூர் அருகே உள்ள தீரன் நகரை சேர்ந்த செங்கமலையின் மனைவி சின்னம்மாள்(வயது 70). இவர் நேற்று முன்தினம் காலை தீரன்நகரில் நடந்து சென்றார். அவர், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் சின்னம்மாள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு சின்னம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×