என் மலர்

  செய்திகள்

  தர்ணா போராட்டம் நடத்திய மாணவர்கள்.
  X
  தர்ணா போராட்டம் நடத்திய மாணவர்கள்.

  தென்காசி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு பள்ளி மாணவர்கள் தர்ணா போராட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இலவச மடிக்கணினி வழங்க கோரி தென்காசி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு பள்ளி மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  தென்காசி:

  தென்காசி அருகே உள்ள நெடுவயல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிலர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களை அங்கு அமரக்கூடாது என்று கூறி அப்புறப்படுத்தினர்.

  பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், கடந்த 2017-18-ம் ஆண்டு படித்த எங்களுக்கு அரசு வழங்கும் இலவச மடிக்கணினி வழங்கப்படவில்லை. எனவே அதனை வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால் உயர்கல்வி படிப்பதற்கு வசதியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
  Next Story
  ×