என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  திண்டிவனம் அருகே கார் மோதி முதியவர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திண்டிவனம் அருகே கார் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
  திண்டிவனம்:

  திண்டிவனம் அடுத்த சாரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சுப்பன் மகன் காளி (வயது 60). தொழிலாளி. இவர் நேற்று இரவு சாரம் பகுதியில் உள்ள ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

  அப்போது, சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார், அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் காளி உயிரிழந்தார்.

  இதுகுறித்து ஒலக்கூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
  Next Story
  ×