search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிடிவி தினகரன்
    X
    டிடிவி தினகரன்

    மொழிப்போர் தியாகிகளுக்கு டிடிவி தினகரன் வீர வணக்கம்

    தமிழகத்தின் தனிப்பெரும் சரித்திரப் போராளிகளான மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    உயிருக்கு நிகரான நம் அன்னை தமிழைக் காத்திட தங்கள் இன்னுயிரையும் ஈந்த மொழிப்போர் தியாகிகளைப் போற்றிடும் வீரவணக்க நாளில் அவர்களை நன்றியோடு நினைவு கூர்ந்திடுவோம். மொழிதான் ஓர் இனத்தின் அடையாளம் என்பதை மறக்காமல் நம் தாய்மொழியை காத்திடவும், நவீன காலத்தின் தேவைக்கேற்ப அதனை வளர்த்திடவும் இந்நாளில் உறுதி ஏற்போம்.

    அதுதான் தங்கள் வாழ்வையே தாய்மொழிக்காக தந்திட்ட அந்த தியாக சீலர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையும். தமிழகத்தின் தனிப்பெரும் சரித்திரப் போராளிகளான மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×