என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  ஆறுமுகநேரி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆறுமுகநேரியில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  ஆறுமுகநேரி:

  ஆறுமுகநேரி காணியாளர் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 48). இவர் ஆறுமுகநேரி பள்ளிவாசல் பஜாரில் ஸ்வீட் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி கவிதா. இவர்களுக்கு விஷ்வா, விக்னேஷ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு கவிதாவிற்கு இரைப்பை வலி ஏற்பட்டு அதனால் சென்னையில் சகோதரன் வீட்டில் தங்கியிருந்து, அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்தார். சென்னையில் ஓய்வெடுத்த அவரை, செந்தில்குமாரும் அடிக்கடி பார்த்து வந்தார். இந்நிலையில் இம்மாதம் 15-ந் தேதி சென்னையில் இருந்து கீழ புதுக்குடியில் உள்ள தாய் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு ஒரு வாரம் ஓய்வு எடுத்துவிட்டு 22-ந் தேதி ஆறுமுகநேரியில் உள்ள கணவர் வீட்டிற்கு வந்தார். ஆனால் செந்தில்குமார் தனது தந்தை சோமசுந்தரத்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவருக்கும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு கோவையிலுள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

  இந்நிலையில் தனது மனைவி வீட்டிற்கு வந்துவிட்டார் என்றதும் நேற்று செந்தில்குமார் கோவையில் இருந்து வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். இதற்காக நேற்று முன்தினம் இரவு கவிதாவுக்கு போன் செய்து தான் ஊருக்கு வருவதாக கூறியுள்ளார். அதிகாலை 12.30 மணி அளவில் செந்தில்குமார் தனது வீட்டில் வெளியே நின்று ஹாலிங்பெல் அடித்தபோது கதவை தனது மகன் விஷ்வா திறந்துள்ளார். அப்போது விஸ்வா அழுது கொண்டே இருந்தாராம்.

  இதையடுத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பூஜை அறையில் உள்ள மின்விசிறியில் கவிதா துப்பட்டாவால் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவரை உடனடியாக மீட்டு காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து செந்தில்குமார் அளித்த புகாரின்பேரில் ஆறுமுகநேரி போலீசார் கவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். இன்ஸ்பெக்டர் செல்வி விசாரணை நடத்தி வருகிறார்.
  Next Story
  ×