search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள ஆபத்தான பள்ளம்
    X
    சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள ஆபத்தான பள்ளம்

    தஞ்சை-நாகை சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள ஆபத்தான பள்ளம் சீரமைக்கப்படுமா?

    தஞ்சை-நாகை சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள ஆபத்தான பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சாலியமங்கலம்:

    டெல்டா மாவட்ட பகுதிக்கு முக்கிய சாலையாக தஞ்சை-நாகை சாலை உள்ளது. இந்த சாலையை நீடாமங்கலம், கொரடாச்சேரி, திருவாரூர் பகுதிக்கு சென்று வர பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் நாகூர் தர்கா, வேளாங்கண்ணி அன்னை ஆரோக்கிய மாதா பேராலயம் சென்று வர சுற்றுலா பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் தஞ்சை- நாகை சாலை பழுதடைந்து காணப்படுகிறது. மேலும் சாலையின் நடுவே ஆபத்தாக பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தஞ்சை-நாகை சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள ஆபத்தான பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×