search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தூத்துக்குடியில் தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

    தூத்துக்குடி பீச் ரோட்டில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு நேற்று அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பீச் ரோட்டில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு நேற்று அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் நடத்தி வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்தில் தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, ஐ.என்.டி.யு.சி, எச்.எம்.எஸ். உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு அனைத்து மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரசல் தலைமை தாங்கி பேசுகையில், வருகிற 26-ந் தேதி டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்த உள்ளனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கோவில்பட்டியில் டிராக்டர் பேரணி நடைபெற உள்ளது. இந்த பேரணியில் அனைத்து மத்திய தொழிற்சங்கத்தை சேர்ந்த அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும், வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினார்கள். ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட தலைவர் கதிர்வேல், தொ.மு.ச. சுசி ரவீந்திரன், எச்.எம்.எஸ். சத்யா உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×