என் மலர்

  செய்திகள்

  சங்கிலி பறிப்பு
  X
  சங்கிலி பறிப்பு

  சோமரசம்பேட்டையில் பெண்ணிடம் 4½ பவுன் தாலி சங்கிலி பறிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சோமரசம்பேட்டையில் பட்டப்பகலில் வீட்டு வாசலில் நின்ற பெண்ணிடம் 4½ பவுன் தாலி சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
  ஜீயபுரம்:

  திருச்சி சோமரசம்பேட்டை அருகில் தீரன் நகர் பெரியார் சாலை பகுதியை சேர்ந்தவர் ரவிசந்திரன். இவர் திருச்சியில் வைரம் பட்டை தீட்டும் கடையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ராஜேஸ்வரி (வயது 50). இவர் தன்னுடைய வீட்டில் பகல் 11.45 மணி அளவில் வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 4 பேர் 2 மோட்டார் சைக்கிளில் வந்து, அவர் அணிந்திருந்த 4½ பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். 

  உடனே அவர் இதுபற்றி சோமரசம்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்குவிரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் வழிப்பறி கொள்ளையர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள்கள் அரியாற்றின் கரையில் விட்டுச்சென்றுள்ளனர். அதில் ஒரு மோட்டார் சைக்கிளுக்கு பதிவு எண் இல்லை. இதனால் அவை திருட்டு மோட்டார் சைக்கிள்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். 

  மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  Next Story
  ×