என் மலர்

  செய்திகள்

  கோப்பு படம்.
  X
  கோப்பு படம்.

  தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள், 5 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்தில் கடந்த காலங்களில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது. இப்போது படிப்படியாக குறைந்து 5 ஆயிரத்திற்கும் கீழ் வந்துள்ளது.

  சென்னை:

  இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. அதன் பிறகு தினமும் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். பலர் உயிரிழந்தனர்.

  அதேபோல தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருந்தது. ஆனால் சமீப மாதங்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.

  தமிழ்நாட்டில் இதுவரை 8 லட்சத்து 34 ஆயிரத்து 171 பேரை கொரோனா தாக்கியுள்ளது. அதில் 8 லட்சத்து 16 ஆயிரத்து 878 பேர் குணமடைந்துள்ளனர். 12 ஆயிரத்து 309 பேர் இறந்துள்ளனர்.

  தற்போது ஆஸ்பத்திரியில் 4 ஆயிரத்து 984 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த காலங்களில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது. இப்போது படிப்படியாக குறைந்து 5 ஆயிரத்திற்கும் கீழ் வந்துள்ளது.

  நேற்று ஒரு நாளில் 586 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். சென்னையில் ஒருவரும், நெல்லையில் ஒருவரும் உயிரிழந்தனர். அவர்களுக்கு வேறு சில நோய்களும் இருந்ததால் உயிரிழந்துள்ளனர்.

  தற்போது சென்னை நகரில் 1,749 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்ற மாவட்டங்களில் மிக குறைவாகவே உள்ளது. நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை.

  19 மாவட்டங்களில் 10-க்கும் குறைவானவர்களே நோய் தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள். சென்னையில் 153 பேரும், செங்கல்பட்டில் 51 பேரும், கோவையில் 47 பேரும் பாதிக்கப்பட்டனர்.

  இதேபோல திருப்பூரில் 30 பேர், ஈரோட்டில் 27 பேர், திருவாரூரில் 26 பேர், காஞ்சீபுரத்தில் 25 பேர், திருவள்ளூரில் 24 பேர் பாதிக்கப்பட்டனர்.

  சென்னை நகரில் இதுவரை 2 லட்சத்து 30 ஆயிரத்து 26 பேரை கொரோனா தொற்றி உள்ளது. இதேபோல கோயம்புத்தூரில் 53 ஆயிரத்து 966 பேரையும், செங்கல்பட்டில் 51 ஆயிரத்து 206 பேரையும் நோய் தாக்கி இருக்கிறது.

  கடந்த 24 மணிநேரத்தில் 63 ஆயிரத்து 71 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் 1 கோடியே 55 லட்சத்து 77 ஆயிரத்து 766 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

  சோதனையில் கொரோனா தொற்று இருப்பதும் மிகவும் குறைவாகவே இருக்கிறது. அதாவது 0.93 சதவீதம் பேருக்கே நோய் தொற்று இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை 59 ஆயிரத்து 226பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது.

  Next Story
  ×