search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜிகே மணி
    X
    ஜிகே மணி

    வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் அரசியல் முடிவு எடுப்பதற்கான பாமக கூட்டம் திடீர் ஒத்திவைப்பு- ஜிகே மணி

    வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் அரசியல் முடிவு எடுப்பதற்கான பாமக கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று ஜிகே மணி அறிவித்துள்ளார்.

    சென்னை:

    தமிழகத்தில் கல்வி, வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு பா.ம.க. தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

    இந்த வி‌ஷயத்தில் தமிழக அரசு எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டி இருந்தார்.

    இந்த நிலையில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி நேற்று வெளியிட்ட அறிக்கையில், இட ஒதுக்கீடு கோரும் விவகாரத்தில் அரசியல் முடிவு எடுப்பதற்காக நாளை காலை 11 மணிக்கு முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

    ஆனால் இந்த கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ஜி.கே.மணி இன்று வெளியிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கோரும் வி‌ஷயத்தில் அரசியல் முடிவு எடுப்பதற்கு பா.ம.க. நிர்வாகக் குழுவின் அவசரக்கூட்டம் நாளை 25-ந் தேதி திங்கட்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அந்தக்கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக வரும் 31-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்று காலை 11 மணிக்கு இணையவழியில் நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது.

    இவ்வாறு ஜி.கே.மணி அறிக்கையில் கூறி இருக்கிறார்.

    Next Story
    ×