search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல்.முருகன்
    X
    எல்.முருகன்

    முருகனின் வேல் திமுகவை விரட்டியடிக்கும்... ராசிபுரத்தில் எல்.முருகன் பிரசாரம்

    முருகனின் வேலை ஸ்டாலின் ஏந்தியதாகவும், மிக விரைவில் முருகனின் வேல் திமுகவை விரட்டியடிக்கும் என்றும் எல்.முருகன் பிரசாரத்தின்போது பேசினார்.
    ராசிபுரம்:

    தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இன்று நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தின்போது மக்களிடையே அவர் பேசியதாவது:-

    ஸ்டாலினையே வேல் தூக்க வைத்தது தான் பாஜக நடத்திய வேல் யாத்திரையின் வெற்றி. முருகனின் வேலை ஸ்டாலின் ஏந்தியுள்ளார்; மிக விரைவில் முருகனின் வேல் திமுகவை விரட்டியடிக்கும். வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவினர் அதிகப்படியாக சட்டமன்றம் செல்வார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இன்று பிற்பகல் மாவட்ட அளவிலான கட்சி  பிரதிநிதிகள் மற்றும் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் மாநில தலைவர் எல்.முருகன் பங்கேற்று தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார்.
    Next Story
    ×