என் மலர்

  செய்திகள்

  தற்கொலை
  X
  தற்கொலை

  மொரப்பூர் அருகே தொழிலாளி தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மொரப்பூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  மொரப்பூர்:

  மொரப்பூர் அருகே உள்ள போடிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வேலு (வயது 44). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி கல்பனா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். வேலுவுக்கு நீண்ட நாட்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இதுகுறித்து மொரப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா அங்கு சென்று வேலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×