என் மலர்

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)
    X
    கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

    தமிழகத்தில் இன்று 586 பேருக்கு புதிதாக கொரோனா- 2 பேர் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தமிழகத்தில் இன்று புதிதாக 586 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

    அதன்படி, தமிழகத்தில் இன்று 586 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 34 ஆயிரத்து 171 ஆக அதிகரித்துள்ளது.

    வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 673 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 16 ஆயிரத்து 878 ஆக உயர்ந்துள்ளது.

    ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 309 ஆக அதிகரித்துள்ளது.
    Next Story
    ×